26.2 C
Colombo
Wednesday, October 9, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு பாதிப்பு

நாட்டில் யுத்தம் நிறைவு பெற்று 15 வருடங்களாகியும் நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் புத்தசாசன அமைச்சும் தொல்பொருள் திணைக்களமும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளாகும்.

அதனால் அவர்கள் தங்களின் செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழர்கள் பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல. சிங்கள மக்களின் உண்மையான நண்பர்களாகவே வாழ விரும்புகின்றனர் என  செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற  அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு மற்றும் புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட வடக்கு கிழக்கில் புராதன பௌத்த நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. எந்த சந்தர்ப்பத்திலும் பௌத்த விகாரைகள் சேதமாக்கப்படவில்லை.

எனினும் யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் தொல்பொருள் இடங்களை திரிபு படுத்தி பௌத்த அடையாளங்களாக சித்தரிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவை பௌத்த அடையாளங்களாக இருந்திருந்தால் அது பௌத்த இடங்களாக பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமே தவிர அவற்றை திரிபு படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றப்பட வேண்டும். தையிட்டியில் தனியார் காணி அபகரிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள விகாரை அகற்றப்பட வேண்டும். மாங்குளத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை அகற்றப்பட வேண்டும்.

குருந்தூர் மலையில் ஆதி சிவனார் ஆலயத்தில் தமிழ் மக்கள் ஒரு பொங்கல் வைக்கக் கூட முடியாமல் உள்ளது. தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அங்கு தகரம் ஒன்றை வைத்துதான் பொங்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள்.

அப்படியானால் தமிழர்களுக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா? நாட்டில் யுத்தம் நிறைவு பெற்று 15 வருடங்களா கியும் நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் புத்தசாசன அமைச்சும் தொல்பொருள் திணைக்களமும் மேற்கொள்கின்ற இது போன்ற நடவடிக்கைகள்தான். திணைக்களம் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles