பெல்ஜியத்திலும் கொரோனா வைரசில் இரண்டாவது அலையால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு தழுவிய முடக்க நிலைக்குத் திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற கடைகள் வணிக நிலையங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் டிசம்பர் நடுப்பகுதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் அதிகபட்சம் 4 பேர் மட்டுமே ஒன்றுகூட அனுமதிகப்படுவார்கள்.
பல்பொருள் அங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே விற்க முடியும்.
வீடுகளுக்கு ஒரு விருந்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்;.
இலையுதிர் பள்ளி விடுமுறைகளும் நவம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
தொழிற்சாலைகள் செயற்பட அனுமதிக்கப்படும்.
பள்ளிகள் எச்சரிக்கையுடன் திறக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.