பொதுசுகாதார பரிசோதகர்கள் என தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு வீடொன்றிற்குள் நுழைந்த மூவர் வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் மாகோவில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இந்த சம்பவம் இடம்பெற்று பொதுசுகாதார பரிசோதகர்கள் என தம்மை தெரிவித்துக்கொண்டு வீடொன்றினுள் நுழைந்த மூவர் வீட்டை பார்வையிடுவது போல நடித்த பின்னர் வீட்டில் உள்ளவர்களுக்கு மருந்துகள் சிலவற்றை வழங்கி உடனடியாக அவற்றை பயன்படுத்துமாறு கேட்டதாகவும் வீட்டிலிருந்தவர்கள் அந்த மருந்தினை பயன்படுத்தியவுடன் சுயநினைவை இழந்தனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதனை பயன்படுத்திய மூவரும் வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வீட்டிலிருந்தவர்கள் இன்று காலையே கண்விழித்துள்ளனர்.
இந்த கொள்ளை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இதேவேளை பொதுசுகாதார பரிசோதகர்கள் போன்று அறிமுகப்படுத்திக்கொண்டு வீடுகளிற்குள் நுழைய முயலும் நபர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் மருந்துகள் எவற்றையும் வழங்குவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.