95 வயதான இவர் தனது டுவிட்டரில் ‘முஸ்லிம்களிற்கு மில்லியன் கணக்கான பிரெஞ்சு மக்களைக் கொல்லும் உரிமை உள்ளது. அவர்கள் பிரெஞ்சு மக்களில் ஆத்திரமடைய உரிமை உள்ளது’ எனத் தெரிவித்துள்ள கருத்து மலேசிய அரசாங்கத்திலேயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த டுவிட்டர் கருத்தினை, உடனடியாக டுவிட்டர் நிறுவனம் தடை செய்துள்ளது.95 வயதான மஹதீர் மொகமட்டின் மோசமான கொலைவெறிக் கருத்திற்கு, பிரான்சின் வெளிவிகார அமைச்சு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.மலேசிய அரசாங்கம் இவரிற்கு எதிரான நடவடிக்கையை எடுக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.