27 C
Colombo
Tuesday, December 3, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

மாத்தறை மாவட்டத்தில் திக்வெல்ல, வலஸ்கல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் வலஸ்கல பிரதேசத்தில் டொரமுரே வீதியிலுள்ள கால்நடை வைத்திய அலுவலகத்திற்கு அருகில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வலஸ்கல பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய சாரதியாக பணிபுரிந்து வந்தவர் ஆவார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யாரென்பது குறித்தும் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்தும் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது வெளிநாட்டில் மறைந்துள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவரின் பெயரைப்பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள  நபரொருவரிடம் மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்டவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால், துப்பாக்கிச் சூட்டுக்கும் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என பொலிஸார் விசாரைணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ரி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles