24.6 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழில் பட்டதாரிகள் போராட்டம்!

பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி, வேலையில்லா பட்டதாரிகள் இன்று (9) யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னாள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

‘பட்டம் வீட்டில்; பட்டதாரிகள் நடு ரோட்டில்’, ‘ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம்’, ‘வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்’, ‘எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது’, ‘படிப்புக்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா’, ‘எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க வேண்டும்’, ‘படித்ததற்கு கூலித்தொழிலா கடைசி வரைக்கும்’, ‘படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா?’, ‘பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா?’, ‘படித்தும் பரதேசிகளாக திரிவதா?’ என போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். 

மேலும், தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டும்; இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles