29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில், இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில், 4 பேர் படுகாயம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில், கனரக வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானதில், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில், ஏ9 வீதியில், இன்று மதியம் 12.45 மணியளவில், விபத்து இடம்பெற்றுள்ளது.

கனரக வாகனம், காணியொன்றுக்குள் பின்னால் திருப்ப முற்பட்ட வேளையில், வீதியால் சென்ற முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானது.
இதன் போது படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித் மூவரும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles