ரஷ்ய ராணுவ விமான விபத்து – இருவர் பலி

0
51

ரஷ்ய ராணுவ விமானம் ஒன்று பயிற்சியின்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் பயணம் செய்துகொண்டிருந்த இருவர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Sukhoi–34 ரக விமானம் மலைப்பாங்கான பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமான இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாரால் விபத்து நேர்ந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

அதனை உறுதிசெய்ய விசாரணை நடத்தப்படுகிறது.

வட ஒசெட்டியா (North Ossetia) பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது.

உக்ரேனில் போர் நடந்துகொண்டிருக்கும் இடத்திலிருந்து அவ்விடம் 800 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.