அரசு தங்களது பலத்தை நாட்டின் சுபீட்சத்திற்காகப் பிரயோகிக்க கோரிக்கை

0
184

ராஜபக்ச அரசு தமது பெரும்பான்மைப் பலத்தை முழு நாட்டுக்கும், உலகத்திற்கும் வெளிப்படுத்தி விட்டீர்கள். இனியாவது இப் பலத்தினை நாட்டின் சுபீட்சத்திற்காகப் பிரயோகியுங்கள் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நல்லூர்த் தொகுதிப் பொறுப்பாளருமான கு. மதுசுதன் தெரிவித்தார்.

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,              
அனைத்து இனங்களும், அனைத்துச் சமயங்களும் சமனாக மதிக்கப்பட்டு இந் நாட்டில் பெரிதும் பாதிக்கப்பட்டதும், சுயநிர்ணய உரிமைகளுக்காக இன்று வரை போராடும் தமிழ்மக்களுக்கான நிலையான பொருத்தமான தீர்வினைக் கொண்ட புதிய அரசியலமைப்பொன்றை இப் பலத்தைக் கொண்டு அரங்கேற்றுங்கள்.
அதுவே இனி வளமான இலங்கைத் தீவைக் கட்டியெழுப்பும். எனவே, ஒன்றுபட்டு எழ வளமான சிறந்த அரசியலமைப்பினை அனைவரும் ஒன்றுபட்டு வரைவோம். நிறைவேற்றுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.