யாழ்ப்பாணம், வடமராட்சி – கொற்றாவத்தை அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையின் ஸ்மார்ட் வகுப்பறையை சஜித் பிரேமதாஸ இன்று திறந்து வைத்தார். நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான குழுவினர் பாடசாலை சமூகத்தினரால் வெற்றிலை கொடுக்கப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
பிரபஞ்சம் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் தொலைக்காட்சி, 5 கணனிகள் இதன்போது பாடசாலைக்கு வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ், ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் அமைப்பாளர் எஸ்.கிருபாகரன், வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் மு.சதாசிவம், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
‘பிரபஞ்சம்’ திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்பறை வசதிகள் மற்றும் பாடசாலை பேருந்து வழங்கும் வேலைத்திட்டங்களில் பங்கேற்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் நேற்று வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டார்.
எதிர்வரும் 13 அம் திகதி வரை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை வசதிகள் வழங்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.