19 வயதுடைய கனேடிய பிரஜை ஒருவர் நேற்று மாலை ஹிக்கடுவ கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார்.குறித்த கனேடியர் ஆபத்தான நீரோட்டம் குறித்த எச்சரிக்கை அறிகுறிகளை மீறி கடலில் குளித்துக் கொண்டிருந்ததால் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும், இலங்கை கடற்படையினரும் ஈடுபட்டுள்ள நிலையில், ஹிக்கடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.