அரசியலில் பிரவேசிக்கும் திட்டம் இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார். தான் அரசியலில் பிரவேசிப்பதாக இருந்தால் கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற்ற போதே அவ்வாறு செய்திருப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் அரசியலில் இணைந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு வந்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான அண்மைய போராட்டங்களில் ரொஷான் மஹாநாம பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.