மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேணி கிராமத்திற்கான பிரதான வீதியை புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2.69 கிலோ மீற்றர் நீளமான கோறளைப்பற்று சுங்கான்கேணி கிராம வீதியானது நீண்டகாலம் புனரமைக்கப்படாத நிலையில் வீதி பெருந்தெருக்கள் அமைச்சு 68மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வீதி புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்மொழிவுகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட வீதி புனரமைப்பு ஆரம்ப நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சோபா ரஞ்சித் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது பொதுஜன பெரமுனவுடன் இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுத்துவருவதன் காரணமாக கொரனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவாக அபிவிருத்திகளை செய்துள்ளதுடன் முன்னெடுத்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த காலத்திலிருந்த அரசியல் சாணக்கியமற்ற தமிழ் அரசியல் தலைவர்களின் வெளிப்பாடே இன்று தமிழ் மக்கள் பல்வேறு தேவைகளுடன் வாழ்வதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர்
பூ.பிரசாந்தன் இதன்போது தெரிவித்தார்.