அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை

0
138
எதிர்வரும் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் உள்நாட்டு அரிசி தேவையை பூர்த்தி செய்வதற்காக கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளை இலங்கை இறக்குமதி செய்யவுள்ளது.கடந்த வாரம் பாராளுமன்றத்தில் வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவில் பேசும் போதே இந்தத் தீர்மானத்தை வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நளின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளார்.கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றை சந்தைக்கு வெளியிடாமல் மறைத்து செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள நிலைமையை போக்க நாட்டின் பிரதான மற்றும் பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி வர்த்தக சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் முறைமையொன்று வடிவமைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.