மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்று இடம் பெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவிக்கையில்,
தனது உரையின் போது ஜனாதிபதி தனது ஆசிரியரின் பாடத்தை நினைவு கூர்ந்தார் ‘பேரரசர்களைப் பற்றி ரோயல் கல்லூரியின் பாடம் தனது வெற்றிக்கு காரணம்’ என குறிப்பிட்டார்.
நாட்டை எவ்வாறு வழிநடத்துவது மற்றும் பொருளாதாரத்தை முன்னேற்றுவது போன்ற சவாலை மற்றவர்கள் பொறுப்பேற்க விரும்பாத போது அதை எவ்வாறு சமாளித்தார் என்பதையும் இதன்போது ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கற்பித்த றோயல் கல்லூரியின் ஆசிரியர் திரு. சிவலிங்கம் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.