26 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கைக்கான சீனத் தூதுவர், மட்டக்களப்பிற்கு விஜயம்

மட்டக்களப்பு விஜயம் செய்திருந்த, இலங்கைக்கான சீனத் தூதுவர் கியு சென்கொங், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து நேற்றுக் கலந்துரையாடினார்.

மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தலைமையில் தூதுவரை சந்தித்த குழுவினர் மாவட்டத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலான திட்டங்களையும் சீனத் தூதுவரிடம்
முன்வைத்துள்ளனர்.

இதில் நீண்டகால மற்றும் குறுகிய கால திட்டங்கள் என பல விடயங்கள் அடங்குவதுடன், கல்வித்துறை, மருத்துவதுறை, தொழிற்துறை, தொழிற்பயிற்சி வழங்குதல், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்தி, மாணவர்கள் பாடசாலை இடைவிலகல், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு விசேட தேவையுடைய குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடுகள் தொடர்பான பல விடயங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கு 1.5 பில்லியன் நிதி வழங்கியுள்ளதுடன் கொவிட் தொற்று பாதிப்புற்றிருந்த காலத்தில் முன்னுரிமை அடிப்படையில் இலங்கைக்கு தேவையான தடுப்பு ஊசி மருத்துகளை வழங்கியதாகவும், கிழக்கு பல்கலைக்கழத்திற்கு பல புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதையும், பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போது கிழக்கு மாகாண மக்களுக்காக அரிசி வழங்கப்பட்டதையும், அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்காக பாடசாலை சீருடை வழங்குவதற் தேவையான நடவடிக்கை மேற்கொண்டதையும், சீனத் தூதுவர் சந்திப்பின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.
சீன தூதரக அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles