இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைகளையும், நாட்டின் பொருளாதார நிலையையும் முதலில் ஆராய்ந்த பின்னரே இலங்கையில் புதிய திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் ஜப்பான் பரிசீலிக்கும் என ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
எனினும் கடன் மறுசீரமைப்புக்குப் பின்னர், முன்னர் ஆரம்பிக்கப்பட்ட 11 திட்டங்களை மேற்கொள்வதே தமது முன்னுரிமை என தூதரகம் தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் ஜப்பான் புதிய திட்டங்களை உறுதியளித்துள்ளதா என்ற கேள்விக்கே தூதரகம் இந்த பதிலை வழங்கியுள்ளது.