25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கையில் 20 இலட்சம் பெண்களுக்கான உயிர் காக்கும் சேவை!

ஐக்கிய நாடுகளின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார நிறுவனம், அடுத்த ஆறு மாதங்களில் இலங்கையில் உள்ள 20 இலட்சத்துக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உயிர்காக்கும் சுகாதார சேவையை வழங்குவதற்காக 9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

இலங்கை சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான சமூக-பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது.

பலவீனமான மின்சார பற்றாக்குறை மற்றும் முக்கியமான பொருட்கள் உபகரணங்கள் மற்றும் மருந்து பற்றாக்குறை ஆகியவற்றிற்கு மத்தியில் ஒரு காலத்தில் வலுவான நிலையில் இருந்த சுகாதார அமைப்பு தற்போது வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது.

இது, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கருத்தடைக்கான அணுகல் உள்ளிட்ட பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை வழங்குவதை கடுமையாக பாதிக்கிறது.

பாலின அடிப்படையிலான வன்முறையில் இருந்து தப்பியவர்கள் உட்பட தேவைப்படும் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கான தற்போதைய பாதுகாப்பு வழிமுறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நிதி ஆதாரங்கள் இல்லாததால் உடல்நலம், காவல்துறை தங்குமிடம் என்பன குறைந்து வருகின்றன.

இதன்காரணமாக சேவைகள் குறைந்து வருவதால் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வன்முறை பாதிப்பு அதிகரித்து வருவதாக 2022 மே மாத ஆய்வு ஒன்று காட்டுகிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியம் உரிமைகள் மற்றும் கண்ணியம் ஆகியவற்றில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஐக்கிய நாடுகளின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார நிறுவன நிர்வாக இயக்குனர் வைத்திய கலாநிதி நடாலியா கனெம் கூறியுள்ளார்.

இலங்கைப் பெண்களுக்கு 99 சதவீத நிறுவன பிரசவ விகிதம் உட்பட நிலையான நன்மைகள் கிடைத்துள்ளன ஆனால் இந்த முன்னேற்றம் இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

11000 இளம்பெண்கள் உட்பட 215000 பெண்கள் தற்போது கர்ப்பமாக உள்ளனர். மேலும் அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 145000 பெண்கள் பிரசவம் செய்வார்கள்.

சுமார் 60000 பெண்களுக்கு அறுவை சிகிச்சைகள் தேவைப்படலாம்.

இந்தநிலையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் முக்கியமான சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உறுதிபூண்டுள்ளது என்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார நிறுவன இலங்கைக்கான பிரதிநிதி குன்லே அதெனியி தெரிவித்துள்ளார்.

இதன்படி:-

● 1.2 மில்லியன் மக்களின் அவசரகால மற்றும் மகப்பேறு பராமரிப்பு மற்றும் பாலியல் வன்புணர்வு மற்றும் குடும்ப வன்முறைக்கான மருத்துவ மேலாண்மை உட்பட உயிர்காக்கும் மருந்துகள் உபகரணங்கள் மற்றும் பொருட்களை விநியோகித்தல் முன்னுரிமையான இனப்பெருக்க சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.

● மாற்றுத்திறனாளிகள் உட்பட தேவைப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு 10000 பிரசவம், மகப்பேறு மற்றும் கண்ணியம் கருவிகளை வழங்குதல்.

● உயிர்காக்கும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சேவைகளை அணுக 37000 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பணம் மற்றும் உதவியை வழங்குதல்.

● கர்ப்ப காலத்தில் 500000 பெண்களுக்கு சுகாதார எச்சரிக்கை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தல்

● ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களை மேற்கொள்வதற்கும், வன்புணர்வுக்கான மருத்துவ மேலாண்மைக்கும் 1250 மருத்துவச்சிகளின் திறனை வலுப்படுத்துதல்.

● பாலின அடிப்படையிலான வன்முறையில் இருந்து தப்பியவர்களுக்கான சேவைகளை விரிவுபடுத்த 10 தங்குமிடங்களை தயார்படுத்தல்.

● 286000 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலின அடிப்படையிலான வன்முறை தடுப்பு மற்றும் கிடைக்கும் சேவைகள் மற்றும் ஆதரவு பற்றிய உயிர்காக்கும் தகவலை வழங்கல்

● பாலின அடிப்படையிலான வன்முறையின் அபாயங்களைக் குறைக்க வாழ்வாதாரத் திட்டத்துடன் 12500 பெண்களுக்கு ஆதரவளித்தல்.

● 4000 பருவப் பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரப் பொருட்களை வழங்குதல்.

போன்ற சேவைகளையே தாம் வழங்கவேண்டியுள்ளதாக குன்லே அதெனியி தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles