சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது. கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி டக்வர்த் லூயிஸ் முறையில் 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.