இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் கடந்த 7 ஆம் திகதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 17-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் இன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்தார். அவரை தூதரக அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
இஸ்ரேல் பிரதமரை சந்திப்பதுடன், பலஸ்தீன தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேல் சென்று அந்நாட்டி தலைவர்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.