இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்புக்கும் இடையேயான போர் நிறுத்தத்தை வரவேற்பதாக இலங்கை அறிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல் ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் லெபனான் மற்றும் அந்த பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும், வழிவகுக்கும் என இலங்கை நம்புவதாகவும் குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான போர் நிறுத்தம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.