ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளிவிவகார அமைச்சர் ஹொசேன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளி விவகார அமைச்சர் ஹொசேன் அமிர் அப்துல்லாஹியன் (Hossein Amir Abdollahian) மற்றும் அவரது உயர்மட்ட தூது குழுவினரரை , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை(20) மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.