உயர்த்தப்பட்ட 1700 ரூபா சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கும் அவ்வாறே வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படாமை தொடர்பில் நேற்று (09) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினை சம்பள கட்டுப்பாட்டு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சபையினால் எந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டாலும், அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை அவ்வாறே வழங்குவதற்கு தொழில் அமைச்சர் எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
வேலைத்திட்டம்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமையினால் முதலாளிகள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால் குறித்த விடயம் சம்பள கட்டுப்பாட்டு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்த சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயார் படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.