உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் என்ற தகவலை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிம் மற்றும் அவரது இரு மகன்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க முடியாது என முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகை சட்டபூர்வமாக செல்லுபடியாகாது என தெரிவித்த குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பினர்இ பூர்வாங்க ஆட்சேபனையை சமர்ப்பித்துள்ளனர்.
இதன் காரணமாகஇ அதனை நிராகரித்து குற்றவாளிகளை விடுவிக்குமாறு ஆட்சேபனைகள் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது.
இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை (15) தீர்ப்பை வழங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கஇ சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகையின் செல்லுபடியாகும் தன்மையை ஆராய தமது நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை எனவும் எனவே ஆரம்ப ஆட்சேபனையை நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.
இதயைடுத்து வழக்கின் முன் விசாரணை மாநாடு ஜூன் 6 ஆம் திகதி இடம்பெறும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.