உலக சுகாதார ஸ்தாபனத்தின் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான உலகளாவிய ஒப்பந்தத்தினை அடுத்த வருடம் கைச்சாத்திடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் உலகளாவிய தொற்றுநோய் நிலைமைகளைத் தடுக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பில் 2022ஆம் ஆண்டு கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றை அடுத்த வருடம் நிறைவு செய்து ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய குறித்த ஒப்பந்தத்தினை அடுத்த ஆண்டு மே மாதம் கைச்சாத்திடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.