இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை, வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க, தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு
தீர்மானித்துள்ளது.
வவுனியாவில் இன்றைய தினம், தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் நடைபெற்ற வேளை, இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.