நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி கல்வி சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டியும் சம்பந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் கோரி கல்வி பொது சாதாரண பரீட்சை விடைத்தாள் மதீப்பீடு கடமைக்காக வந்திருந்த ஆசிரியர்கள் கல்முனையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை முன்பாக ஆரம்பமாகிய போராட்டமானது பிரதான வீதி வழியாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை வந்தடைந்து நிறைவடைந்தது.
போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை வெளிப்படுத்தி தமது எதிர்ப்பினை வெளியீட்டு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்ததுடன்.போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தின் முன்பாகவும் சிறிது நேரம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் தலைமையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ. வாஹிட் நெறிப்படுத்தலில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா தலைமையிலான ஆசிரியர் குழு கலந்துரையாடல் மேற்கொண்ட பின்னர் சுமூக தீர்வு ஒன்றும் எட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.