30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காத்தான்குடி வைத்தியசாலையில் இருந்து வாழைச்சேனையைச் சேர்ந்த 12 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த வாழைச்சேனையைச் சேர்ந்த 12 பேர் சிகிச்சைகளை நிறைவு செய்த பின்னர் இன்று தமது வீடுகளுக்கு திரும்பியதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 16 தினங்களுக்கு முன்னர் இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்கள் சிகிச்சைகளை முடித்துக் கொண்டு காத்தான்குடி ஆதூர வைத்தியசாலையிலிருந்து தமது வீடுகளுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு, கம்பஹாவைச் சேர்ந்த மேலும் 36 பேரும் தமது சொந்த இடங்களுக்கு செல்லவிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles