மட்டக்களப்பு காத்தான்குடி-02, ஹிதாயா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அனுசரணையுடன் இரத்ததான நிகழ்வு ஹிதாயா பள்ளிவாயல் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று சத்திர சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இரத்தத்திற்கான தேவை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையினால் சுட்டிக்காட்டப்பட்டதைத்தொடர்ந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்குவதற்காக இந்த இரத்ததான முகாம் நடைபெற்றது.
ஆண்கள் பெண்கள் என பலரும் இரத்ததான வழங்கியிருந்ததுடன் இப் பள்ளிவாயலின் இரண்டாவது இரத்ததான முகாம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.ஹிதாயா பள்ளிவாயலின் தலைவர் எம்.எச்.எம்.அன்வர் ஹாபீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்தான நிகழ்வில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் டாக்டர் அலீமா ரகுமான் மற்றும் தாதியர்கள்பள்ளிவாயலின் செயலாளர் பஸால் ஜிப்ரி உட்பட பள்ளிவாயல் நிருவாகிகளும் கலந்து கொண்டிருந்தனர்.