கிளிநொச்சியில் அழகுக்கலை, திருமண அலங்காரம் உள்ளிட்ட சுயதொழில்கள் தொடர்பாக யுவதிகளுக்கு இன்று பயிற்சிகள் வழங்கப்பட்டன.
55 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் தனியார் விடுதி மண்டபத்தில் இந்த பயிற்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருத்தினராக கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கலந்துகொண்டதுடன் கண்டாவளை பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செயல்முறை அடிப்படையில் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் அதற்கான விளக்கமும் வழங்கப்பட்டது. 180க்கு மேற்பட்ட யுவதிகள் பயிற்சியில் கலந் கொண்டிருந்ததுடன் நிகழ்வின் இறுதியில் பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.