கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக பனி மூட்டமான நிலை காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இயற்கையின் மாற்றத்தினால் மலைப்பிரதேசங்களில் காணப்படும் பனிப்பொழிவுகள் போன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் பனிமூட்ட நிலை அதிகமாக காணப்படுகின்றது.
பனிப்பொழிவுகளால் வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தாலும் விவசாயத்திற்கு மழை போதாத நிலை நிலவுவதாக, விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.