கிழக்கு மாகாணமட்டமுஸ்லிம் கலாசாரப்போட்டி

0
96

கிழக்கு மாகாணமட்ட முஸ்லிம் கலாசாரப் போட்டி இன்று மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
மாகாண கல்வி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார்
கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
வலயக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்
முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் போட்டிகளில் பங்கு பற்றினர்.
அல்குர்ஆன் ஓதுதல், ஹஸீதா பாடுதல், றப்பாண் அடித்து இஸ்லாமிய பாடல் பாடுதல் போன்ற பல்வேறு
முஸ்லிம் கலாச்சாரப் போட்டிகள் இடம்பெற்றன.