கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரையில், மட்டு.டச்பார் கடற்கரை துப்புரவு செய்யப்பட்டது

0
196

கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரை மற்றும் ஆலோசனைக்கு அமைய மாபெரும் துப்புரவு பணி மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை மேம்படுத்தும் வகையில் ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பல வேலை திட்டங்களை முன்னெடுத்துள்ளார்

இதனொரு கட்டமாக கடற்கரைகளை அண்டிய பிரதேசங்களை சுற்றுலா ஸ்தலமாக மாற்றும் வகையில் அப்பகுதிகள் துப்புரவு செய்யப்படுகின்றன.
மட்டக்களப்பு கல்லடி டச் பார் அண்டிய கடற்கரை பகுதியை துப்புரவு செய்யும் நடவடிக்கை, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்.மதிவண்ணன்
தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.

இதில், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம், மட்டக்களப்பு மாநகர பிரதி ஆணையாளர், மாநகர சபை உத்தியோகத்தர்கள், முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.