கொழும்பில் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியின் மீது கார் மோதியுள்ளது.

0
117

குருந்துவத்தை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நெலும்பொகுன பகுதியில் இருந்து சுதந்திர சதுக்கத்திற்கு செல்லும் வழியில் சி.சி.சி மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியின் மீதே கார் மோதியுள்ளது.

மேலும் வாகனத்தை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்.