கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பெல்மதுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இன்று எம்பிலிப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்த் திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோத முற்பட்டுள்ள நிலையில் அதனைத் தவிர்க்க முயன்ற பஸ்ஸின் சாரதி பஸ்ஸை திருப்ப முற்பட்ட போது வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது 27 படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 7 பேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.