கொழும்பு, மருதானையில் சிக்கிய காலாவதியான உணவு சுவையூட்டிகள்! 

0
183

கொழும்பு, மருதானை தொழில்நுட்பக் கல்லூரி (டெக்னிக்கல்) சந்தியில் உள்ள உணவுக் களஞ்சியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, உணவின் சுவையூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் செயற்கை வாசனை திரவிய தொகை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

காலாவதியான உணவும் காலாவதியாகாத உணவும் ஒரே இடத்தில் விநியோகம் செய்யப்பட்டதாக இந்தச் சுற்றிவளைப்புக்குப் பொறுப்பான சிரேஷ்ட விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காலாவதியான உணவுப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த முறைப்பாடு ஒன்றின் அடிப்படையிலேயே இந்த சோதனை  மேற்கொள்ளப்பட்டது.

உணவை சுவைக்க பயன்படுத்தப்படும் இந்தச்  செயற்கை சுவையூட்டிகள் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளிலேயே காலாவதியாகிவிட்டது என கண்டறியப்பட்டுள்ளது.