25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜப்பான் அரசாங்கம் மேலும் 301 மில்லியன் ரூபா நன்கொடை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான ஆதரவை ஜப்பான் தொடர்ந்தும் நீடித்துள்ளது.அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் மேலும் 301 மில்லியன் ரூபா வழங்கவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளதுவடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான நிதியை வழங்கும் உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி நேற்று முன்தினம் கைச்சாத்திட்டுள்ளார்.
2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் பாரிய நன்கொடைகளை வழங்கி வருவதுடன், இதுவரை வழங்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 45 மில்லியன் டொலருக்கும் அதிகம் என இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.
கண்ணிவெடி பாதிப்பற்ற இலங்கையை உருவாக்குவதற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேகி இதன்போது தெரிவித்ததாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, வடக்கு கிழக்கு பகுதிகளில் 215.605 மில்லியன் சதுரமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக்க குமார தெரிவித்துள்ளார்.23.23 மில்லியன் சதுர மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles