24 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜப்பான் கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம பொருள்!

ஜப்பானின் ஹமாமட்சு கடற்கரை நகருக்குச் சொந்தமான கடற்கரையில் கோள வடிவப் பொருள் கரையொதுங்கி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடற்கரைக்கு வந்த சில நகரவாசிகள்  1.5 மீட்டர் விட்டம் கொண்ட  மர்மமான கோளப் பொருளை முதலில் பார்த்தனர்.

அது தொடர்பில் நகர அதிகாரிகள் கடற்கரையை பாதுகாப்பான வலயமாக நியமித்து, காவல்துறை மற்றும் இராணுவத்தை நிலை நிறுத்தினார்கள்.

இது கடலில் வைக்கப்பட்டு இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத வெடிகுண்டாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.

எனினும், அதில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என வலியுறுத்தப்பட்டது. பின்னர் ஜப்பானிய ஊடகங்கள், கோளப் பொருளின் உள்ளே என்ன இருக்கிறது என்பதை X-கதிர்கள் பயன்படுத்தியதாகவும், கோளப் பொருளுக்குள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles