29 C
Colombo
Thursday, December 12, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜேர்மனியில் வன்முறையில் ஈடுபட திட்டம் – 15 வயது சிறுவன் உட்பட மூவர் கைது

துப்பாக்கிகள் கத்திகளை பயன்படுத்தி மோசமான வன்முறைகளில் ஈடுபட திட்டமிட்ட மூன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மான்ஹெய்ம் நகரில் வீடொன்றில் சோதனையிட்ட ஜேர்மனி பொலிஸார் 15 மற்றும் 20 வயது சகோதாரர்களை கைதுசெய்துள்ளனர்.அதன் பின்னர் துருக்கியை சேர்ந்த 22 வயது நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பிராங்போர்ட் அல்லது மான்ஹெய்மில் கிறிஸ்மஸ் சந்தைகள் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் நடவடிக்கைகளால் தேசத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இரண்டு சகோதரர்களும் கடும் மதகொள்கை பிடிப்புள்ளவர்கள் ஐஎஸ் அமைப்பின் மீது பற்றுக்கொண்டவர்கள் தாக்குதல் ஒன்றிற்கான வலுவான திட்டமிடல்களை மேற்கொண்டிருந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles