இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு பொருத்தமற்றவர் என உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனுவை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி முன்வைக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உயர்நீதிமன்றம் நேற்று அனுமதியளித்துள்ளது.சமூக செயற்பாட்டாளரான ஓசல ஹேரத் என்பவரால் இந்த மனு உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனு நேற்றைய தினம் பீரித்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.