தனிமைப்படுத்தல் விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய இன்று புதன்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்-
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் தற்போது வரை 3,222 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3,150 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
குறிப்பாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் கண்காணிப்பை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, நிறுவனங்களின் நிர்வாகிகள் தனிமைப்படுத்தல் விதிகளைக் கடைப்பிடிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்-என்றார்.