தமிழ்த் தினப் போட்டியில், கிழக்கு மாகாணம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட நிலையில், இதற்குப் முதன்மைப் பங்களிப்பு வழங்கிய, மட்டக்களப்பு வலய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரும், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளருமான சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில், வலயக் கல்வி அலுவலகத்தில் நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்த் தினப் போட்டியில், மட்டக்களப்பு வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளிப் பதக்கங்கள், இரண்டு வெண்கலப் பதக்கங்கள் என
11 பதக்கங்களைச் சுவீகரித்துக்கொண்டனர்.
இதன் மூலம் கிழக்கு மாகாணம் தேசிய ரீதியில், முதன்மை பெற்றுக்கொள்வதற்கு முக்கிய பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களும், மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை, நடைபெற்று வரும், தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வில், பதக்கங்களைப் பெற்றுக்கொண்ட, மட்டக்களப்பு வலய பாடசாலைகளைச் சேர்ந்த, தடகள வீரர்களும் கௌரவிக்கப்பட்டனர்.