மட்டக்களப்பு மாவட்டத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையே அக் கட்சியின் புதிய தலைவர் தெரிவுக்கான
தேர்தல் விவகாரத்தை தொடர்ந்து, கருத்து வேற்றுமைகள் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், வேற்றுமைகளை களைந்து ஒருமித்துச் செயற்படும்
முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கட்சியின் உள்ளக முரண்பாடுகள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி தமிழரசுக் கட்சிக்குள் கட்யெழுப்பப்படவேண்டிய ஒற்றுமை தொடர்பிலும்
வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டக் கிளைக் கூட்டத்தின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர முன்னாள் முதல்வர் தி.சரணபவன் ஆகியோர் இணைந்து ஊடக சந்திப்பொன்றையும்
நடாத்தினர்.