வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலதொட்டஎல்ல பிரதேசத்தில், சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26, 32 மற்றும் 56 வயதானவர்கள் எனவும், வெலிமடை மற்றும் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.