நாடளாவிய ரீதியில், முட்டைக் கொள்வனவு எண்ணிக்கை, தற்போது ஒரு மில்லியனால் அதிகரித்துள்ளதாக,கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில், 7 மில்லியனாக காணப்பட்ட நாளாந்தம் கொள்வனவு செய்யப்படும் முட்டைகளின் எண்ணிக்கை, தற்போது 8 மில்லியனாக அதிகரித்துள்ளது.
தற்போது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினாலும், மீன், இறைச்சி போன்றவற்றின் விலைகள் உயர்வினாலும், முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ளது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.