லியோ படத்தை பற்றி பல்வேறு குழப்பங்கள் தற்போது இருந்து கொண்டிருக்கிறது. மன்சூர் அலி கான் சொன்ன பிளாஷ்பேக் கதை பொய்யாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதை லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியிலும் கூறி இருந்தார். அந்த கதை பொய் என சொல்ல ஒரு வசனம் மன்சூர் பேசி இருப்பார், ஆனால் அதை நீக்கிவிட்டோம் எனவும் லோகேஷ் கூறியுள்ளார்.
லோகேஷ் குறிப்பிட்ட அந்த நீக்கப்பட்ட காட்சியை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது.