நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 18 பயணிகள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த விபத்தானது இன்று (24) காலை இடம்பெற்றுள்ளது.அந்நாட்டு தலைநகர் காத்மண்டுவில் உள்ள திருபவுன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த விமான விபத்து இடம்பெற்றுள்ளது.
18 பேர் பலி
இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக விமான நிலையம் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி, அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.