பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இன்று ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை ரயில்வே கட்டுப்பாட்டாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ரயில்வே உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார ஊழியர்கள் குழுவொன்று அவசர தொழற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தது.
இதன் காரணமாக நேற்றிரவு அனைத்து ரயில் பாதைகளிலும் ரயில் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டதாகவும், இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.