பல்கலைக்கழக மாணவர்கள் 57 பேர் இதுவரை பகிடிவதை வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 12 மாதங்களில் 36 பகிடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
பகிடிவதை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கலாநிதி சுரேன் ராகவன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சுயாதீன விசாரணையின் பின்னர் இந்த அனைத்து வழக்குகளிலும் குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த மாணவர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளும் போதெல்லாம், பல்கலைக்கழக படிப்பை மீண்டும் தொடங்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக 0769736357 என்ற அவசர தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.