பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 12.57 மணி அளவில் பூமியில் இருந்து 190 கிலோமீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பான தகவலை அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “ரிக்டரில் 4.7 அளவிலான நிலநடுக்கம் இன்று 00.57.09 மணிக்கு பூமியில் இருந்து 190 கிலோமீட்டர்கள் ஆழத்தில் பாகிஸ்தானில் உணரப்பட்டது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.